கீழ்வேளூர், சிக்கல் பகுதிகளில் பலத்த மழை


கீழ்வேளூர், சிக்கல் பகுதிகளில் பலத்த மழை
x

கீழ்வேளூர், சிக்கல் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர், சிக்கல் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

பலத்த மழை

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து நாகை மாவட்டத்தில் கடந்த வாரம் பலத்த மழை பெய்து. கடந்த சில நாட்களாக மழை பெய்யாமல் வெயில் அடித்து வந்தது.இந்த நிலையில் நாகை உள்பட சில மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி திடீரென நேற்று காலை 10 மணிக்கு நாகை அருகே கீழ்வேளூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த மழை ஒரு மணி நேரம் கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதேபோல் தேவூர், காக்கழனி, சிகார், வடக்காலத்தூர், பட்டமங்கலம், இலுப்பூர், கூத்தூர், ‌‌ஆழியூர், திருக்கண்ணங்குடி, சிக்கல், பொரவச்சேரி, சங்கமங்கலம் அகரகடம்பனூர், புலியூர், ராமர்மடம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

சம்பா, தாளடி நெற்பயிர்களுக்கு தண்ணீர் தேவைப்படும் நேரத்தில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில தினங்களாக பகலில் ெவயில் அடித்தாலும், இரவு நேரத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வந்தது.


Next Story