தென்காசியில் பலத்த மழை


தென்காசியில் பலத்த மழை
x

தென்காசியில் பலத்த மழை பெய்தது

தென்காசி

தென்காசியில் நேற்று காலையிலிருந்து வெயில் அடித்தது. மாலை சுமார் 5 மணிக்கு திடீரென இடியுடன் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் மழை அதிகரித்து பலத்த மழையாக பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனால் வாறுகால்கள் நிரம்பி தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. தென்காசி மட்டுமல்லாமல் குற்றாலம், செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.


Next Story