திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பலத்த மழை


திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பலத்த மழை
x

மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பலத்த மழை பெய்தது.

திருச்சி

துறையூர், ஜூன்.15-

மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பலத்த மழை பெய்தது.

பலத்த மழை

துறையூரில் நேற்று பகலில் கடும் வெயில் சுட்டெரித்தது. இந்தநிலையில் இரவு 7 மணி அளவில் குளிர்ந்த காற்று வீசியது. சிறிது நேரத்தில் சூறைகாற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. இதேபோன்று துறையூரை சுற்றியுள்ள கிராமங்களிலும் மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தா.பேட்டை

தா.பேட்டை பகுதியில் நேற்று இரவு மின்னலுடன் பரவலாக சாரல்மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

உப்பிலியபுரம்

உப்பிலியபுரம், வைரிசெட்டிப்பாளையம், கோட்டப்பாளையம், பச்சபெருமாள்பட்டி, தங்கநகர் பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. தற்போது, இப்பகுதியில் அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால், மழையால் நெல் சேதம்அடைய வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மண்ணச்சநல்லூர்

மண்ணச்சநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென மழை பெய்தது. இந்த மழை 8.30 மணி வரை நீடித்தது. இந்த மழையால் மண்ணச்சநல்லூர் கடைவீதி, சிவன் கோவில் தெரு, திருப்பைஞ்சீலி செல்லும் சாலை உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல், சமயபுரம் பகுதிகளில் பெய்த மழையினால் மழை நீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பக்தர்களும், கடை க்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் அவதி அடைந்தனர். மழையின் போது, சூறாவளி காற்று வீசியதால் மின்தடை ஏற்பட்டது.

திருச்சி மாநகர்

திருச்சி மாநகரில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 6.30 மணிக்கு மேல் வானில் திடீரென கருமேகங்கள் திரண்டன. . இரவு 8.15 மணி முதல் சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. பின்னர் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது. இந்த பலத்த மழை காரணமாக சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்தது. திடீரென பெய்த மழை காரணமாக வேலைக்கு சென்று வீடு திரும்பியவர்கள் அவதி அடைந்தனர். அதே நேரம் இந்த மழையால் மாநகர பகுதியில் குளிர்ந்து காணப்பட்டது.


Next Story