தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
மத்திய அரசு அறிவித்து உள்ள அக்னிபாத் திட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அனைத்து ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் நேற்று பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. ரெயில் நிலையத்துக்குள் பயணிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். நடைமேடை டிக் கெட் வழங்கப்படவில்லை. ஒரு வழியில் மட்டும் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து ரெயில்பாதைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story