கடும் பனியால் பொதுமக்கள் அவதி
தேன்கனிக்கோட்டை பகுதியில் கடும் பனியால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாவில் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதன்படி இந்த ஆண்டு தேன்கனிக்கோட்டை பகுதியில் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக காலை 8 மணி வரை கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் சாலையில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி செல்கின்றனர். பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காலை நேரங்களில் வாக்கிங் செல்லும் முதியவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
Related Tags :
Next Story