காட்பாடியில் கடும் பனிப்பொழிவு


காட்பாடியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் நடந்த சில நாட்களாக பனி அதிகமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை காட்பாடி பகுதியில் கடும் பனிப்பொழிவு இருந்தது. பனிப் பொழிவு அதிகமாக இருந்ததால் எதிரில் வரும் வாகனங்கள் சரியாக தெரியவில்லை. அதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனங்களில் சென்றனர். காட்பாடி ரெயில் நிலையத்தில் பனிமூட்டத்தின் நடுவே ரெயில்கள் வந்து சென்றது. காலையில் கடும் பனிப்பொழிவு இருந்ததால் வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டுவதில் சிரமம் அடைந்தனர்.


Next Story