புள்ளம்பாடி பகுதியில் கடும் பனிப்பொழிவு; பொதுமக்கள் அவதி
புள்ளம்பாடி பகுதியில் கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
திருச்சி
புள்ளம்பாடி, கல்லக்குடி, வரகுப்பை, தாப்பாய், அலுந்தலைப்பூர், கருட மங்கலம், சரடமங்கலம், சிறுகளப்பூர், மேலரசூர், கீழரசூர், மால்வாய் கல்லகம், முதுவத்தூர், கோவாண்டகுறிச்சி ஆலம்பாக்கம், ஆலம்பாடிமேட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் புள்ளம்பாடி-திருமழபாடி சாலை, புள்ளம்படியில் இருந்து அலுந்தலைப்பூர் வழியாக கொளக்காநத்தம், புள்ளம்படியில் இருந்து மேலரசூர், மால்வாய் வழியாக கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்களில் சென்றோர் வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே சென்றனர். பனிப்பொழிவு நீடித்தால் விளை பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story