காலை 9 மணி வரை கடும் பனிப்பொழிவு


திருவலம், சேர்க்காடு பகுதிகளில் காலை 9 மணி வரை கடும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் அவதியடைந்தனர்.

வேலூர்

கடந்த சில நாட்களாக திருவலம், சேர்க்காடு, வள்ளிமலை பொன்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. நேற்று காலை 9 மணி வரையில் கடுமையான பனிப்பொழிவு இருந்தது. இதனால் சாலையில் சென்ற வாகனங்கள் பகலிலும் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றனர். இருசக்கர வாகனத்தில் வேலைக்கு செல்வோரும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகளும் பனிபொழிவின் காரணமாக சிரமப்பட்டு சென்றனர். முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் வெளியில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர்.


Next Story