குமரன் ரோட்டில் போக்குவரத்து நெரிசல்
குமரன் ரோட்டில் போக்குவரத்து நெரிசல்
திருப்பூர்
திருப்பூர் மாநகரில் தீபாவளி பண்டிகையையொட்டி பிரதான சாலையோரம் தடுப்புகள் அமைத்து பாதசாரிகள் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகிறார்கள். இருப்பினும் திருப்பூர் குமரன் ரோட்டில் காலை, மாலை நேரங்களில் வாகன நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. நீண்டவரிசையில் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன.
சாலையோர தடுப்புகளுக்கு அருகே இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் சாலையின் அகலம் மிகவும் குறுகலாகி வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்படுகிறது. இதன் காரணமாக குமரன் ரோட்டில் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. முக்கிய ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், வங்கிகள், ரெடிமேடு ஆடைகள் விற்பனையகம், அரசு அலுவலகங்கள் இருப்பதால் வாகனங்களில் வந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகம். அதனால் ஏற்படும் நெருக்கடியை போக்குவரத்து போலீசார் சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.