ஊத்தங்கரையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்
ஊத்தங்கரை:-
ஊத்தங்கரையில் நேற்று குரு பவுர்ணமி என்பதால் ேகாவை, ஈரோடு, சேலம், அரூர், பெங்களூரு, ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய இடங்களில் இருந்து கிரிவலத்துக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஊத்தங்கரை வழியாக சென்று வருகிறது. ஊத்தங்கரை மைய பகுதியான ரவுண்டானா நான்கு ரோடு வழியாக திருவண்ணாமலைக்கு வழக்கமான பஸ்கள் தவிர டூரிஸ்ட் வாகனங்கள், கார்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருவதால் நான்கு ரோடு ரவுண்டானாவில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் தாறுமாறாக நின்றதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர். போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு சம்பவ இடத்திற்கு வந்த ஊத்தங்கரை போலீசார் போக்குவரத்தை சரி செய்த பின் 2 மணி நேரத்திற்கு பின்பு பஸ்கள் சென்றதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.