இ.எஸ்.ஐ.சி. மருத்துவக்கல்லூரிகளில் சேர காப்பீட்டுதாரர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்


இ.எஸ்.ஐ.சி. மருத்துவக்கல்லூரிகளில் சேர காப்பீட்டுதாரர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 6 May 2023 12:30 AM IST (Updated: 6 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

இ.எஸ்.ஐ.சி. மருத்துவக்கல்லூரிகளில் சேர இ.எஸ்.ஐ காப்பீட்டுதாரர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி

இ.எஸ்.ஐ.சி. மருத்துவக்கல்லூரிகளில் சேர இ.எஸ்.ஐ காப்பீட்டுதாரர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நெல்லை மண்டல துணை இயக்குனர் எஸ்.கிருஷ்ணகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-

மருத்துவக்கல்லூரி

இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரிகளில் 2023-24-ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை எம்.பி.பி.எஸ். வகுப்பிற்கு 437 இடங்களும், பி.டி.எஸ். வகுப்பிற்கு 28 இடங்களும் இ.எஸ்.ஐ. கழகத்தில் காப்பீட்டுதாரரின் வாரிசுகளுக்கு என ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த ஒதுக்கீட்டில் சேர இ.எஸ்.ஐ. கழகத்தில் காப்பீடு செய்த நபர்களின் வாரிசுகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நாடு முழுவதும் உள்ள இ.எஸ்.ஐ.சி. சார்பாக நடத்தப்படும் மருத்துவக்கல்லூரிகள் மற்றும் சில அரசு கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இடங்களுக்கு நீட் (யூ.ஜி.) 2023 தேர்வில் தகுதிபெறும் இ.எஸ்.ஐ. காப்பீட்டு நபர்களின் வாரிசுநபர்கள் நேற்று முன்தினம் முதல் வருகிற 17-ந் தேதி (புதன்கிழமை) மதியம் வரை இணையவழியாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு....

மேலும் விவரங்களுக்கு www.esic.gov.in மற்றும் www.mcc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம். அல்லது அருகில் உள்ள இ.எஸ்.ஐ. கிளை அலுவலகம், துணை மண்டல அலுவலகத்தை வேலை நாட்களில் சென்று பயன்பெறலாம். விண்ணப்பதாரர்கள் 30.9.2022 அன்று இ.எஸ்.ஐ. கழகத்தில் காப்பீடு செய்யப்பட்ட நபராக இருக்க வேண்டும். அவர்களது வாரிசுகளுக்கு, காப்பீட்டுநபர் இட ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story