புஞ்சைபுளியம்பட்டியில் நடந்தவிபத்தில் கோர்ட்டு ஊழியர் பலி


புஞ்சைபுளியம்பட்டியில் நடந்தவிபத்தில் கோர்ட்டு ஊழியர் பலி
x

புஞ்சைபுளியம்பட்டியில் நடந்த விபத்தில் கோர்ட்டு ஊழியர் பலியானாா்.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 48). கோவை நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி கவுரி. காராபாடி தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

நேற்று காலை மொபட்டில் புஞ்சை புளியம்பட்டி சத்தியமங்கலம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே கிருஷ்ணமூர்த்தி சென்றுகொண்டு இருந்தார். அப்போது எதிரே சத்தியமங்கலத்தில் பூ மூட்டைகளை ஏற்றி கொண்டு பொள்ளாச்சி நோக்கி ஒரு வேன் வந்துகொண்டு இருந்தது. அப்போது கண்இமைக்கும் நேரத்தில் வேனும், மொபட்டும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி இறந்தார். வேனை ஓட்டிவந்த பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்த டிரைவர் கனேஷ்குமார் (24) லேசான காயம் அடைந்தார்.

இந்த விபத்து குறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story