திருச்செந்தூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 235 வழக்குகளுக்கு தீர்வு


திருச்செந்தூரில் நடந்த  தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 235 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 12 Sept 2023 12:15 AM IST (Updated: 12 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 235 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சார்பு நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பு நீதிபதி வஷீத் குமார் தலைமையில், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி வரதராஜன் முன்னிலையில் நடந்தது. இதில் பல்வேறு வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதில் அசல் வழக்கு, இந்து திருமண அசல் வழக்கு, வங்கி வாராக்கடன் வழக்குகள், சிறு குறு வழக்குகள், நிறைவேறுதல் வழக்குகள், உரிமையியல் வழக்குகள் உள்பட 304 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டதில், 235 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

இதில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், வங்கி அதிகாரிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story