முதுமலையில் ஹெலிகாப்டர் ஒத்திகை நிகழ்ச்சி


முதுமலையில் ஹெலிகாப்டர் ஒத்திகை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 8 April 2023 12:15 AM IST (Updated: 8 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி நாளை வருவதையொட்டி முதுமலையில் ஹெலிகாப்டர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

நீலகிரி

கூடலூர்

பிரதமர் மோடி நாளை வருவதையொட்டி முதுமலையில் ஹெலிகாப்டர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஹெலிகாப்டர்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து பிரதமர் மோடி நாளை(ஞாயிற்றுக்கிழமை) வருகிறார். இதற்காக தனி ஹெலிகாப்டரில் மசினகுடி வருகிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு செல்கிறார்.

இதைத்தொடர்ந்து பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் உள்ள மேல் ஹம்னஹல்லியில் இருந்து நேற்று காலை 9 மணிக்கு ஹெலிகாப்டர் புறப்பட்டு மசினகுடிக்கு வந்தது. தொடர்ந்து அங்கிருந்து மீண்டும் பந்திப்பூர் புலிகள் காப்பகத்துக்கு இயக்கப்பட்டு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதேபோன்று மதியம் 12 மணி வரை 3 முறை ஹெலிகாப்டர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதை கலெக்டர் அம்ரித், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள், பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

போக்குவரத்து மாற்றம்

அதன்பின்னர் மசினகுடி ஹெலிகாப்டர் தளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து மோப்ப நாய்கள் ரோசி, ஜெரீன் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். மேலும் கட்டுப்பாட்டு பகுதிக்குள் பொதுமக்கள் நுழையவும் தடை விதித்தனர்.

இதற்கிடையே கர்நாடகாவில் இருந்து முதுமலை தெப்பக்காடு வழியாக மசினகுடி செல்லும் சாலையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் செல்ல போலீசார் நேற்று காலை முதல் தடை விதித்தனர். இதனால் கூடலூர் வழியாக ஊட்டிக்கு வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. இதன் காரணமாக கூடலூர் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. இது தவிர மசினகுடி சுற்று வட்டாரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கும் போலீசார் தடை விதித்து உள்ளனர்.

பாதுகாப்பு பணி

இது மட்டுமின்றி நாளை குண்டல்பெட்டில் இருந்து கேரள மாநிலம் சுல்தான்பத்தேரிக்கு போக்குவரத்து திருப்பி விடப்படும் எனறு கூறப்படுகிறது. தொடர்ந்து முதுமலை சாலையில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்படும் என்று தெரிகிறது. மேலும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து சுமார் 2 ஆயிரம் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


Next Story