சாலை விபத்துகளில் உயிரிழப்பை தடுக்க ஹெல்மெட் அணிவது அவசியம்


சாலை விபத்துகளில் உயிரிழப்பை தடுக்க ஹெல்மெட் அணிவது அவசியம்
x
திருப்பூர்


சாலை விபத்துகளில் உயிரிழப்பை தடுக்க ஹெல்மெட் அணிவது அவசியம் என்று போலீஸ் துணை கமிஷனர் ஆசைத்தம்பி கூறினார்.

பொங்கல் திருவிழா

திருப்பூர் அனுப்பர்பாளையம்புதூர் கருப்பராய சுவாமி கோவில் பொங்கல் திருவிழா கடந்த 3-ம் தேதி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த நிலையில் அனுப்பர்பாளையம்புதூர் உதயம் நற்பணி மன்றம் சார்பில், குடும்ப உறவுகளை பேணி காப்பவர்கள் ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு உதயம் நற்பணி மன்ற தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் ஆனந்த், பொருளாளர் சதீஷ்குமார், கவுரவ தலைவர் டையிங் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தர் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் பேசினார்கள்.

ெஹல்மெட் அவசியம்

இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஆசைத்தம்பி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார். அப்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம். ஹெல்மெட் அணிவதன் மூலம் ஆண்டுக்கு 100 பேர் உயிரிழப்பு என்பதை 10-ஆக குறைக்க முடியும் என்றார்.

இதில் கருப்பராய சுவாமி கோவில் கமிட்டி நிர்வாகிகள் ராமசாமி, துரை, சுப்பிரமணியம், 1-வது மண்டல தலைவர் உமாமகேஸ்வரி சிட்டிவெங்கடாசலம், தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பெரியார்காலனி எம்.எஸ்.மணி, துணை அமைப்பாளர் கே.ஆர்.முருகேசன், அனுப்பர்பாளையம்புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவர் அமைப்பு செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் ராஜ்பிரதாப், உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story