ஹெல்மெட் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம்


ஹெல்மெட் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம்
x
தினத்தந்தி 28 Jun 2023 12:15 AM IST (Updated: 28 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் ஹெல்மெட் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது.

நாகப்பட்டினம்


நாகையில் போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் ஹெல்மெட் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது.

விழிப்புணர்வு

நாகையில் போதை பொருள் பயன்பாட்டுக்கு எதிராகவும், ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும் மாவட்ட போலீஸ் துறை சார்பில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்றார்.

300 போலீசார் பங்கேற்பு

அவரை பின்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட போலீசார் ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலமானது, அண்ணா சிலை, கடைத்தெரு, எல்.ஐ.சி., பப்ளிக் ஆபிஸ் சாலை, மாவட்ட கலெக்டர் அலுவலகம், நாகூர் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று வாஞ்சூர் ரவுண்டானாவில் நிறைவடைந்தது.


Next Story