ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி


ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 23 July 2023 12:15 AM IST (Updated: 23 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துறை சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் உட்கோட்டத்திலுள்ள அனைத்து போலீஸ் நிலையங்களில் இருந்தும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்தபடி சென்றனர். இந்த பேரணியானது விளாத்திகுளம் ஆற்றுப்பாலத்தில் இருந்து தொடங்கி எட்டயபுரம் ரோடு, மதுரை ரோடு, கீழரத வீதி வழியாக சென்று பஸ்நிலையத்தில் முடிவடைந்தது.


Next Story