ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்


ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்
x

தஞ்சையில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கரவாகன விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதனை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சையில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கரவாகன விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதனை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்

தஞ்சை பெரிய கோவில் அருகே ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார், இருசக்கர வாகன பராமரிப்பாளர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் தஞ்சை மேம்பாலம் வழியாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.இதில் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார்வாகன ஆய்வாளர் ஆனந்த், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.பின்னர் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கூறுகையில், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். காரில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். இதன் மூலம் உயிரிழப்பை தடுக்கலாம். மாவட்டத்தில் தற்போது ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அபராதம் விதிப்பது எங்களுக்கு நோக்கமல்ல. ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து செல்லும்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டால் உயிரிழப்பை தடுக்கலாம். ஒரு உயிரின் மதிப்பு விலை மதிப்பற்றது.

உயிரிழப்பு குறைவு

இதற்காகத்தான் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றாலும் அவர்களுக்கு உடனுக்குடன் இரட்டிப்பு அபராதம் விதிக்க உத்தரவிட்டு உள்ளேன். அவர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்தாலும் விதிமுறை பின்பற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். பாரபட்சம் இன்றி அபராதம் விதிக்கப்படுகிறது. தற்போது தஞ்சை மாவட்டத்தில் விபத்தால் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இனி அனைவரும் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டுங்கள். உயிரிழப்பை தடுக்க ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்


Next Story