ஹெல்மெட்-சீட்பெல்ட் அணிந்தவாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கிய போலீசார்
கோவில்பட்டியில் ஹெல்மெட்-சீட்பெல்ட் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு போலீசார் இனிப்பு வழங்கி பாராட்டினர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் நேற்று மாலையில் எட்டயபுரம் ரோடு சந்திப்பு அருகே ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வரும் வாகன ஓட்டிகளை ஊக்கப்படுத்தவும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு முன்னுதாரணமாக செயல்பட்டதற்காக அவர்களை பாராட்டும் விதமாகவும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
போக்குவரத்து ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சொக்கலிங்கம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
மேலும் ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டி களுக்கும் சீட் பெல்ட் அணியாமல் கார் உள்ளிட்ட வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களுக்கும் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் எனவும் போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story