150 வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய போலீஸ் கமிஷனர்


150 வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய போலீஸ் கமிஷனர்
x

சேலம் மாநகரில் 150 வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட்டுகளை போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி வழங்கினார்.

சேலம்

சேலம் மாநகரில் போலீசார் சார்பில் போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே, சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா, அம்மாபேட்டை குமரகிரி சர்வீஸ் ரோடு ஆகிய இடங்களில் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தலைமையில் போலீசார் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது ஒவ்வொரு இடங்களிலும் ஹெல்மெட் அணியாமல் வந்த தலா 50 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி ஹெல்மெட் வழங்கினார். முன்னதாக அவர் சேலம் டவுன் போலீஸ் நிலைய வளாகத்தில், போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆன்லைன் அபராத தொகையை அவர்கள் விரைவில் செலுத்துமாறு போலீசார் மூலம் அறிவுறுத்தும் மையத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story