த.மு.மு.க. சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள்


த.மு.மு.க. சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள்
x
தினத்தந்தி 22 April 2023 12:15 AM IST (Updated: 22 April 2023 12:18 AM IST)
t-max-icont-min-icon

த.மு.மு.க. சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது

ராமநாதபுரம்

தொண்டி,

தொண்டியில் த.மு.மு.க தலைவர் சையது அப்துல் காதர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட ஏழை,எளிய குடும்பங்களுக்கு ரூ 1.50 லட்சம் மதிப்பில் அரிசி, புத்தாடை, இறைச்சி உள்ளிட்ட பொருட்களை த.மு.மு.க.வினர் வழங்கினர். த.மு.மு.க. மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வக்கீல் ஜிப்ரி, தி.மு.க. நகர செயலாளர் இஸ்மத் நானா, தொண்டி பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் சுலைமான், ம.ம.க. மாவட்ட துணைசெயலாளர் தொண்டி ராஜ், ம.ம.க ஒன்றிய செயலாளர் காமராஜ், ம.ம.க. செயலாளர் பரக்கத் அலி, த.மு.மு.க. பொருளாளர் மைதின், துணை தலைவர் ஹம்மாது சலிம் அப்துல்லாஹ், அப்துல்ரஹிம் மவ்லானா.இப்ராஹிம் உள்ளிட்ட நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.


Related Tags :
Next Story