போலீஸ் பணி எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி மையம்


போலீஸ் பணி எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி மையம்
x

நெல்லையில் போலீஸ் பணி எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2022-ம் ஆண்டுக்கான 2-ம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்புத்துறை காவலர் பணிக்கான எழுத்து தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு இணையவழி மூலம் வருகிற 15-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணையவழி மூலம் விண்ணப்ப பதிவு தொடர்பான சந்தேகங்களுக்கு, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 'உதவி மையம்' அமைக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிப்பது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் இந்த உதவி மையத்திற்கு 9498101762 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தெரிவித்து உள்ளார்.


Next Story