ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா
சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா நடைபெற்றது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா டவுன் பஞ்சாயத்து தலைவர் ரெஜினி ஸ்டெல்லா பாய் தலைமையில் நடந்தது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எபநேசர், தொழிலதிபர் தங்கராஜ், பொறியாளர் ஜெயபிரகாஷ், வியாபாரிகள் சங்க தலைவர் தலைவர் சசிகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி இயக்குனர் டினோ மெலினோ ராஜாத்தி வரவேற்றார். மேலசாத்தான்குளம் சேகரகுரு கிங்ஸ்லி ஜான் ஆரம்ப ஜெபம் செய்தார். மாரியம்மன் இந்து கல்விச் சங்க துணைத் தலைவர் சங்கர், லயன்ஸ் கிளப் செந்தில் ஆறுமுகம், வக்கீல் பழனி முருகன் மற்றும் பலர் கொண்டனர். பள்ளி தாளாளர் நோபிள் ராஜ் ஒலிம்பிக் சுடரை வழங்கி போட்டிகளைத் தொடங்கி வைத்தார். உடற்பயிற்சி விளையாட்டுகள், விளையாட்டுப் போட்டிகள், கராத்தே, சிலம்பம் போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உடற்பயிற்சி ஆசிரியர் அந்தோணி ஜான் சைமன் பிரிட்டோ விளையாட்டு விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி நன்றி கூறினார்.