வீட்டில் மூலிகை தோட்டம் அமைக்க மானியம்


வீட்டில் மூலிகை தோட்டம் அமைக்க மானியம்
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடி வட்டாரத்தில் வீட்டில் மூலிகை தோட்டம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி தோட்டக்கலை துறை அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாநில தோட்டக்லை அபிவிருத்தி திட்டம் 2022 - 23-ம் ஆண்டு திட்டத்தில் வீட்டு மூலிகைத் தோட்டம் அமைப்பதற்கு 10 வகையான மூலிகைச் செடிகள் 20 எண்ணம், செடி வளர்ப்பு பைகள் 10 எண்ணம், 2 கிலோ தேங்காய் நார்கட்டிகள் 10 எண்ணம், மண்புழு உரப்பைகள் 4 எண்ணம் (1கிலோ வீதம்) மற்றும் ஒரு தொழில்நுட்ப கையேடு ஆகியவை வழங்கப்படும். ஒரு பயனாளிக்கு ரூ.1,500 கட்டணத்தில் அரசு மானியம் ரூ.750, பயனாளியின் பங்களிப்பு தொகை ரூ.750 ஆகும். இதற்கு பயனாளிகள் வலைதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். அல்லது உடன்குடியில் செயல்படும் தோட்டக்கலை இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story