திருப்பரங்குன்றம் கோவிலில் எண்ணெய் காப்பு திருவிழாவில் பக்தர்களுக்கு மூலிகை தைலம்


திருப்பரங்குன்றம் கோவிலில்  எண்ணெய் காப்பு திருவிழாவில் பக்தர்களுக்கு மூலிகை தைலம்
x

திருப்பரங்குன்றம் கோவிலில் எண்ணெய் காப்பு திருவிழாவில் பக்தர்களுக்கு மூலிகை தைலம் வழங்கப்பட்டது.

மதுரை

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் கோவிலில் எண்ணெய் காப்பு திருவிழாவில் பக்தர்களுக்கு மூலிகை தைலம் வழங்கப்பட்டது.

எண்ணெய் காப்பு திருவிழா

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில்ஆண்டுக்கு ஒரு முறை எண்ணெய்க்காப்பு திருவிழா நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் 5 நாட்கள் தொடர்ந்து நடக்ககூடிய இந்த திருவிழாவில் தெய்வானை அம்பாள் மட்டுமே எழுந்தருளுவது தனிசிறப்பு. இந்த ஆண்டிற்கான எண்ணெய் காப்பு திருவிழா நேற்று இரவு தொடங்கியது. திருவிழா வருகின்ற 11-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. திருவிழாவையொட்டி உற்சவர் சன்னதியில் இருந்து திருவாட்சி மண்டபகத்திற்கு மேளதாளங்கள் முழங்க தெய்வானை அம்பாள் மட்டும் எழுந்தருளினார். அங்கு ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவிழாவையொட்டி தங்க ஊசியால் பல் துலக்குதல், வெள்ளி சீப்பால் தலைவாருதல், கண்ணாடியால் முகம் பார்த்தல், வெற்றிலை பாக்கு போடுதல் உள்ளிட்ட அன்றாட நிகழ்வுகள் நடைபெற்றது.

மூலிகை தைலம்

மேலும் தெய்வானை அம்பாளுக்கு "மகா சடை" அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. அங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்து இருந்து பயபக்தியுடன் தெய்வானை அம்பாளை வழிப்பட்டனர். பக்தர்களுக்கு பிரசாதமாக மூலிகை (எண்ணெய்) தைலம் வழங்கப்பட்டது. இதேபோல தினமும் 7 மணியளவில் தெய்வானை அம்பாள் எழுந்தருளுதலும், அன்றாட நிகழ்வும் நடைபெறும்.

திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற 11-ந்தேதி எண்ணெய் காப்பு திருவிழாவின் நிறைவையொட்டி பல்லக்கில் தெய்வானை அம்பாள் எழுந்தருளி நகர்வலம் வந்து அருள்பாலிப்பார். விழா ஏற்பாடுகைள கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.


Next Story