பாரம்பரிய விதைகள் கண்காட்சி


பாரம்பரிய விதைகள் கண்காட்சி
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாரம்பரிய விதைகள் கண்காட்சி

நீலகிரி

குன்னூர்

நவீன காலத்தில் மரபு மாற்றப்பட்ட விதைகள் மற்றும் ரசாயன உரங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பாரம்பரிய விதைகள் அழிந்து போகும் சூழல் உருவாகியுள்ளது. பாரம்பரிய விதைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் சார்பில் குன்னூரில் கண்காட்சி நடைபெற்றது.

தனியார் அரங்கில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் மலைப்பகுதியில் விளையக்கூடிய பாரம்பரிய விதை மூலம் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், கீரைகள், மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை செடிகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் மலைக்காய்கறிகளான கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்டவையும் காட்சியில் வைக்கப்பட்டது. எந்திரங்கள் உதவியின்றி இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட தேயிலைத்தூள் கண்காட்சியில் இடம் பெற்றது. இனி வரும் காலங்களில் பாரம்பரிய விதைகளை மீட்டெடுத்து, அடுத்த தலைமுறையினருக்கு விட்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதை பொதுமக்கள் பலர் பார்வையிட்டனர்.


Next Story