வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்


வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2023 12:15 AM IST (Updated: 31 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை நகர தி.மு.க. சார்பில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை நகர தி.மு.க. சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி அப்துல் காதர், செல்லப்பா, வர்த்தக அணி முத்துச்செல்வி, தகவல் தொழில் நுட்ப அணி பெடரல் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுரண்டை நகர செயலாளர் ஜெயபாலன் வரவேற்றார். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க உறுதிமொழியேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பேச்சாளர்கள் அரங்கநாதன், உடன்குடி தனபால், மரியராஜ், ஞானசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அரசு ஒப்பந்தக்காரர் கரையாளனூர் எம். சண்முகவேலு, சுரண்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவர் சக்தி, முன்னாள் நகர செயலாளர் பூல்பாண்டியன், தலைமை பொதுக்குழு ஏ.பி.அருள், ஒன்றிய செயலாளர் எம்.பி.எம்.அன்பழகன், சீனித்துரை, கனிமொழி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story