ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை விரைவாக பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை விரைவாக பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x

ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை விரைவாக பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்

காங்கயம்,

ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை விரைவாக பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊதியூர் வனப்பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக பதுங்கி இருக்கும் சிறுத்தை மலையடிவார பகுதியில் இருக்கும் விவசாய தோட்டத்திற்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்கள் ஆகிவற்றை கொன்று வனப்பகுதிக்குள் கொண்டு சென்று சாப்பிட்டு வருகிறது. இதையடுத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கடந்த 15 நாட்களுக்கு மேலாக ஊதியூர் வனப்பகுதியில் 20 கண்காணிப்பு கேமராக்கள், 2 கூண்டுகள் ஆகிவற்றை வைத்து சிறுத்தையை பிடிக்க முயற்சித்து வந்தனர். ஆனால் இதுவரை சிறுத்தை குறித்த எந்தவித கட்சிகளும் கேமராக்களில் பதிவாகவில்லை. சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்டுள்ள கூண்டிலும் சிறுத்தை சிக்கவில்லை.

அதை தொடர்ந்து டிரோன் கேமராக்கள் மூலமும் கண்காணித்தனர். அந்த முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது. பின்னர் தேடும் பணிகளை தீவிரப்படுத்தினர். அதை தொடர்ந்து 3 வனத்துறை ரோந்து வாகனங்கள் வரவழைப்பட்டு அதன் மூலம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு பகல், இரவு நேரங்களில் சிறுத்தையை தேடி வருகின்றனர். மேலும் நள்ளிரவு நேரங்களில் சிறுத்தை குறித்த தகவல் ஏதேனும் பொதுமக்களிடம் கிடைக்க பெற்றால், உடனடியாக ரோந்து வாகனத்தின் மூலம் சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று சிறுத்தையை பிடிக்கும் முயற்சி எடுத்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி சத்தியமங்கலம், காரமடை ஆகிய பகுதிகளில் இருந்து மேலும் 2 கூண்டுகள் வரவழைக்கப்பட்டு வைக்கப்பட்டது. தொடர்ந்து 30 கேமராக்கள் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சிறுத்தை பிடிபடாமலும், கண்காணிப்பு கேமராக்களில் தென்படாமலும் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது. இந்தநிலையில் வனத்துறையினர் ஏற்கனவே பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் 10 கேமராக்களை மாற்று பகுதிக்கு கொண்டு சென்று பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கடந்த 20 நாட்களுக்கு மேலாக ஊதியூர் வனப்பகுதியில் சிறுத்தை பதுங்கி மலை அடிவார பகுதியில் நாங்கள் வளர்த்து வரும் ஆடு மாடுகளை வேட்டையாடி வருகிறது. வனத்துறையினரும் கூண்டுகள், கேமராக்கள், ரோந்து வாகனம் ஆகிவற்றின் மூலம் சிறுத்தையை பிடிக்க முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் 20 நாட்களுக்கு மேலாகியும் சிறுத்தை பிடிபடவில்லை. மலையடிவார பகுதியில் வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில் வெளியே வரமுடியாமல் அச்சப்பட்டு வருகிறோம். இதனால் கடந்த 20 நாட்களாக எங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆடு மாடுகளை வெளியே கட்டிவிட்டு இரவு முழுவதும் பாதுகாக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. மேலும் காலை விடியும் போது இரவு ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்திருக்குமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகிறோம். எனவே வனத்துறையினர் பொதுமக்கள் நலன் கருதி கூடுதல் ஆட்களை வைத்து, தேடுதல் பணிகளை தீவிரப்படுத்தி விரைந்து சிறுத்தையை பிடிக்க வேண்டும்.என தெரிவித்தனர்.

-


Next Story