தேனி-போடி அகலப்பாதையில் அதிவேக என்ஜின் சோதனை -நாளை இயக்கப்படுகிறது
தேனி-போடி இடையே நாளை (வெள்ளிக்கிழமை) ரெயில் அதிவேக என்ஜினை இயக்கி சோதனை நடத்தப்பட உள்ளது.
மதுரை
மதுரை கோட்டத்துக்கு உள்பட்ட மதுரை-போடி இடையே அகலப்பாதை பணிகள் நடந்து வந்தது. இதில், மதுரையில் இருந்து தேனி வரையிலான பணிகள் முடிந்து, ரெயில் இயக்கப்படுகிறது. இதற்கிடையே, தற்போது தேனி-போடி இடையேயான 15 கி.மீ. தூர அகலப்பாதை பணிகள் முடிவடைந்துள்ளன. இதற்காக இந்த பாதையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, தேனி-போடி இடையே நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 120 கி.மீ. வேகத்தில் ரெயில் என்ஜினை இயக்கி சோதனை நடத்தப்பட உள்ளது. இந்த அதிவேக சோதனை நடக்கும் போது, அந்த பாதையின் அருகே பொதுமக்கள் செல்லவோ, தண்டவாள பகுதியை கடக்கவோ வேண்டாம் என்று கோட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Related Tags :
Next Story