சாலையை ஆக்கிரமிக்கும் செடி கொடிகள்


சாலையை ஆக்கிரமிக்கும் செடி கொடிகள்
x

சாலையை ஆக்கிரமிக்கும் செடி கொடிகள்

திருப்பூர்

வெள்ளகோவில்

வெள்ளகோவில் பகுதியில் உள்ள கிராமப்புற மற்றும் நகர் பகுதி சாலைகளில் கடந்த மாதத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக சாலையோரத்தில் செடி கொடிகள் நன்கு வளர்ந்து புதர்மண்டி சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளன. இதனால் சாலையின் அகலம் குறுகி உள்ளது வெள்ளகோவிலில் இருந்து உப்புபாளையம், வேப்பம்பாளையம் வழியாக வள்ளியரச்சல் செல்லும் சாலையில் அதிக அளவில் செடி கொடிகள் சாலையை ஆக்கிரம்பு செய்துள்ளன. இதனால் வாகனங்கள் தாராளமாக போய் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு வாகனம் வந்தால் எதிரில் வரும் வாகனம் முட்புதருக்குள் தான் ஒதுங்க வேண்டி உள்ளது. சாலையில் செடி கொடி மற்றும் முட்புதர்கள் இருப்பதால் சாலை வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக தெரிவதில்லை. இதனால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

இது மட்டுமின்றி இரவு நேரங்களில் பாம்பு போன்ற விஷ பூச்சிகள் சாலையில் ஓரத்தில் முற்புதரில் இருப்பதால் வாகன ஓட்டி மற்றும் நடந்து செல்வோர் ஒரு வகையான அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆகவே கிராமப்புற மற்றும் நகர் பகுதியில் சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ள செடி கொடி முட்புதர்களை அகற்ற வேண்டுமாய் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story