விவசாயிகளுக்கு அதிக மகசூல் தரும் தென்னங்கன்றுகள்
வாழவச்சனூர் அரசு வேளாண்மை கல்லூரியில் அதிக மகசூல் தரும் தென்னங்கன்றுகளை விவசாயிகள் பெற்று பயன் பெறலாம்.
வாணாபுரம்
வாணாபுரம் அருகே உள்ள வாழவச்சனூரில் அரசு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி உள்ளது.
இந்த கல்லூரியில் பல்வேறு வகையான செடி வகைகள் மற்றும் காய்கறி வகைகள், தென்னங்கன்றுகள் உள்ளிட்டவைகள் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. மேலும் அதிகளவில் பயன் தரக்கூடிய வகையில் தென்னை மரக்கன்றுகளை வளர்த்து வருகின்றனர்.
அந்த வகையில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய அரசம்பட்டி என்ற ரக தென்னக்கன்றுகளை வளர்த்து வருகின்றனர். இந்த தென்னங்கன்று தண்ணீர் இல்லாத காலத்திலும், வறட்சி நிறைந்த இடங்களிலும் நடப்பட்டு பராமரித்தால் மரம் நன்றாக வளரக்கூடியதாகவும் உள்ளது.
இந்த தென்னங்கன்றுகள் 8 ஆண்டுகள் முதல் காய்க்க தொடங்குகிறது. குறிப்பாக ஒரு மரத்திற்கு 120 முதல் 150 தேங்காய் வரை காய்க்க கூடிய தன்மை கொண்டது.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்த்து வளரக்கூடியதாகவும், இந்த தென்னங்கன்று உள்ளது.
எனவே தற்போது பருவமழையை எதிர்நோக்கி தென்னை மரம் நடும் விவசாயிகள் இந்த வகையான தென்னங்கன்றுகள் பெற விரும்புபவர்கள் வாழவச்சனூர் அரசு வேளாண்மை கல்லூரியை அணுகி பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.