அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டில் உயர்கல்வி, வேலை வாய்ப்பு-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டில் உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது என்று அமைச்சர் கே.ஆர்.ெபரியகருப்பன் தெரிவித்து உள்ளார்.
காரைக்குடி,
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டில் உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது என்று அமைச்சர் கே.ஆர்.ெபரியகருப்பன் தெரிவித்து உள்ளார்.
மாலை அணிவித்து வரவேற்பு
கல்லல் ஊராட்சி ஒன்றியம் பொய்யலூர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணிகளை தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார். பின்னர் பாடத்தான் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மாலை அணிவித்து அரசுப்பள்ளிகளை தேர்வு செய்தமைக்காக அவர்களது பெற்றோர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;-
சிறப்பு ஒதுக்கீடு
பொய்யலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பாடத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தற்போது 72 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் மிகவும் திறமையானவர்கள் மற்றும் பல்வேறு தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர். ஆகையால் அரசு பள்ளியில் சேர்ப்பதனால் திறமையானவரிடம் கல்வி கற்கும் சூழ்நிலை மாணவர்களுக்கு ஏற்படுகிறது.
தற்போது அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு உயர்கல்வி கற்பதிலும் வேலை வாய்ப்புகளிலும் சிறப்பு ஒதுக்கீடு வழங்கப் பட்டுள்ளன. அரசு பள்ளியில் படிப்பதே சிறப்பு என்ற சூழ்நிலை தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமிநாதன், கல்லல் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சொர்ணம் அசோகன், தி.மு.க. தலைமைப்பொதுக்குழு உறுப்பினர் கல்லல் கரு அசோகன், வட்டார வேளாண்மை ஆலோசனை குழு தலைவர் நெடுஞ்செழியன், தாசில்தார் மாணிக்கவாசகம், கல்லல் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் இளங்கோ, வட்டார வளர்ச்சி அலுவலர் அழகிமீனாள், ஊராட்சி மன்ற தலைவர் திவ்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.