பாளையங்கோட்டையில் உயர் கல்விக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி; கலெக்டர் விஷ்ணு தகவல்
பாளையங்கோட்டையில் உயர் கல்விக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது என கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவ-மாணவிகள் தங்கள் கல்லூரி கனவை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு உதவும் வகையில் தமிழக முதல்-அமைச்சரின் "நான் முதல்வன்" என்ற திட்டத்தின் கீழ் "கல்லூரி கனவு" என்ற தலைப்பில் உயர் கல்விக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பாளையங்கோட்டை அரியகுளம் சாரதா மகளிர் கல்லூரியில் நடக்கிறது.
நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்குகிறார். அமைச்சர் ராஜ கண்ணப்பன் தொடங்கி வைத்து பேசுகிறார். பள்ளி மாணவ- மாணவிகளுக்கான இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொறியியல், மருத்துவம், வணிகவியல், கலை மற்றும் அறிவியல் போன்ற உயர் கல்வி படிப்புகள் மற்றும் அதனை சார்ந்த வேலைவாய்ப்புகள் சம்பந்தமாகவும், மாணவ-மாணவிகளின் சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கும் வகையில் நடைபெறுகிறது. இதில் நேரடியாக கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் நெல்லை கலெக்டரின் யூடியூப் சேனலில் கண்டு பயன் பெறலாம்.
இந்த தகவலை கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.