தியாகதுருகம் அரசு பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி முகாம்
தியாகதுருகம் அரசு பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நடைபெற்றது.
தியாகதுருகம்,
தியாகதுருகம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட உதவி திட்ட அலுவலர் பழனியாப்பிள்ளை தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். பெண் கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா வரவேற்றார். பேராசிரியர் பால்ராஜ், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் சிவக்குமார், மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வீரலட்சுமி, வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் அரசு ஆகியோர் உயர்கல்வி நிறுவனங்கள், படிப்பு பிரிவுகள், வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கி கூறி, பயிற்சி அளித்தனர். இதில் தியாகதுருகம் பகுதியில் உள்ள 17 அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த குழுவினர், தங்களது பள்ளிக்கூடத்துக்கு சென்று, 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். நிகழ்ச்சியில் வட்டார பயிற்சி ஒருங்கிணைப்பாளர் முகமது இதயத்துல்லா, ஆசிரியர் பயிற்றுநர்கள் விஜயலட்சுமி, கோகிலா, ராஜா, காயத்ரி, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.