மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டி முகாம்


மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டி முகாம்
x
தினத்தந்தி 21 Oct 2022 12:15 AM IST (Updated: 21 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 முடித்த பிறகு மேற்படிப்பை தொடர முடியாத மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டி முகாம் கலெக்டர் விசாகன் தலைமையில் நடந்தது.

திண்டுக்கல்

அரசு பள்ளிகளில் பிளஸ்-2 படித்துவிட்டு மேற்படிப்பை தொடர முடியாத மாணவ-மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டி முகாம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-


பிளஸ்-2 முடித்த பிறகு மேற்படிப்பை தொடர முடியாத மாணவ-மாணவிகளுக்காக தமிழகம் முழுவதும் உயர்கல்வி வழிகாட்டி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்துக்கான உயர்கல்வி வழிகாட்டி முகாம் இன்று (அதாவது நேற்று) நடத்தப்பட்டுள்ளது. குடும்ப சூழ்நிலை, படிப்பை தேர்வு செய்வதில் உரிய வழிகாட்டுதல் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மேற்படிப்பை தொடர முடியாத மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது.


இந்த முகாம் மூலம் உடனடி வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் அழகு கலை பயிற்சி, செல்போன் பழுது நீக்கும் பயிற்சி, ஆட்டோமொபைல் பயிற்சி, தையல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் குறுகிய காலத்தில் அளிக்கப்படுகிறது. அத்துடன் மாணவ-மாணவிகள் வேலை பார்த்துக்கொண்டே படிக்கும் வாய்ப்பும் உள்ளது. அது குறித்த விவரங்கள் இந்த முகாமில் மாணவ-மாணவிகளுக்கு தெரிவிக்கப்படும்.


வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ள படிப்புகளை தேர்ந்தெடுத்து படித்துவிட்டு வேலைக்கு செல்ல விரும்புபவர்களுக்கு அதற்கான வழிகாட்டுதல்களையும் பயிற்சி முகாமை சேர்ந்த அதிகாரிகள் வழங்குவார்கள். அதேபோல் சொந்தமாக தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கும் ரூ.10 லட்சம் வரை எந்தவித பிணையமும் இன்றி கடன் உதவியும் கிடைக்கும்.


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குனர் பிரபாவதி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



Next Story