திண்டிவனத்தில் அதிக வட்டி வசூலித்த வாலிபர் கைது


திண்டிவனத்தில்  அதிக வட்டி வசூலித்த வாலிபர் கைது
x

திண்டிவனத்தில் அதிக வட்டி வசூலித்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம்


திண்டிவனம்,

திண்டிவனம் அடுத்த பாம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 43). இவர் வெண்மணி ஆத்தூர் பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் (32) என்பவரிடம் சிறுக சிறுக ரூ.5 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார்.

இந்த நிலையில் கதிர்வேல் தான் அடகு வைத்த 2 பவுன் நகையை மீட்டு வந்தார். அந்த நகையை ஆனந்தராஜ் பறித்துக்கொண்டு, வாங்கிய கடனுக்கு இதுசரியாகி விட்டது என்று கூறி அவரை திட்டியுள்ளார்.

இதில் மனமுடைந்த கதிர்வேல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் தொடர்பாக கதிர்வேல் அளித்த புகாரின் பேரில், கடனுக்கு அதிக வட்டி வசூலித்தாக கூறி வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜை போலீசார் கைது செய்தனர்.


Next Story