உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி


உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி
x

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியை கலெக்டா் காயத்ரிகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

திருவாரூர்

குடவாசல்;

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியை கலெக்டா் காயத்ரிகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

உயர் கல்வி வழிகாட்டல்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள மஞ்சக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் மாவட்ட கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் அடுத்த கட்டமாக 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், உதவி கலெக்டர் சங்கீதா, முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்வியின் முக்கியத்துவம்

நிகழ்ச்சியில் கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மாணவ- மாணவிகளின் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கு தேவையான வழிகாட்டுதல்கள் இங்கு துறை சார்ந்த வல்லுனர்கள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது. மாணவ -மாணவிகள் கல்வியில் முதன்மையாக விளங்க வேண்டும்.இதை நோக்கமாக கொண்டு ஒவ்வொரு பாடத்திலும் சிறப்பாக பயில வேண்டும். கல்வி ஒன்றே உங்கள் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும். இதை அனைத்து மாணவ- மாணவிகளும் உணர வேண்டும். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து உங்கள் பெற்றோரின் உழைப்பை மனதில் கொண்டு கல்வித்திறனை உயர்த்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.நிகழ்ச்சியில் பொறியியல், மருத்துவம், மருத்துவம் சார்ந்த துணை படிப்புகள், கலை மற்றும் அறிவியல், வணிகவியல், கணக்குப்பதிவியல், சட்டம், கால்நடை, மீன்வளம் ஆகிய துறைகளில் உள்ள உயர்கல்வி படிப்புகள், அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகள், கல்விக்கடன், கல்வி உதவித் தொகை பெறுவது குறித்தும் சிறந்த வல்லுனர்களால் வழிகாட்டல் வகுப்பு நடைபெறுகிறது.

கையேடு

இதை மாணவ- மாணவிகள் அறிந்து தாங்கள் எந்த துறையில் சிறப்பாக விளங்கலாம் என்பதை உறுதி செய்து உத்வேகத்துடன் செயல்பட வேண்டும். உங்கள் மீது பெற்றோர் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். அந்த நம்பிக்கையை காப்பாற்ற கல்வி ஒன்றே ஆயுதம். இவ்வாறு அவர் கூறினார்.மேலும் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கல்லூரி கனவு வழிகாட்டுதல் கையேட்டை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் வழங்கினார். நிகழ்ச்சியில் குடவாசல் தாசில்தார் உஷாராணி, துணை தாசில்தார் சரவணகுமார், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story