நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க கூட்டம்


நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க  கூட்டம்
x

சீர்காழியில், நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.

மயிலாடுதுறை

சீர்காழியில், நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் இளங்கோவன், அருள், துணை செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சடையப்பன் வரவேற்று பேசினார். கூட்டத்தில், வருகிற 25, 26 ஆகிய இரண்டு நாட்கள் பெரம்பலூரில் நடக்கும் சாலை பணியாளர் சங்க மாநில மாநாட்டில் மயிலாடுதுறை, சீர்காழி உட்கோட்டங்களில் பணிபுரியும் அனைத்து சாலைப் பணியாளர்களும் குடும்பத்தோடு பங்கேற்பது. மயிலாடுதுறை, சீர்காழி உட்கோட்டங்களில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகங்களில் காலியாக உள்ள இரண்டாம் நிலை சாலை ஆய்வாளர், பதிவு எழுத்தர், பயணியர் விடுதி காவலர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணிகளை தகுதியுள்ள சாலை பணியாளர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், வட்டத் தலைவர் கலைவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலியமூர்த்தி நன்றி கூறினார்.



Next Story