சாலை பணிகளின் தரம் குறித்து நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு


சாலை பணிகளின் தரம் குறித்து நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு
x
தினத்தந்தி 3 Jun 2023 12:15 AM IST (Updated: 3 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் பகுதியில் சாலை பணிகளின் தரம் குறித்து நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்தனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

நாகை கோட்டம், வேதாரண்யம் உட்கோட்டத்தில் நடைபெற்று வரும் சாலை பணிகளை திருச்சி, நெடுஞ்சாலைத்துறை, நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் வட்டத்தின் கண்காணிப்பு பொறியாளர் விஜயலட்சுமி தலைமையிலான என்ஜினீயர் குழுவினர் ஆய்வு செய்தனர்.இந்த குழுவினர் செங்காதலைபாலம் - வேதாரண்யம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு சாலைப்பணிகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது தஞ்சை நெடுஞ்சாலைத்துறை, நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்டப்பொறியாளர் சரவணன், நாகை நெடுஞ்சாலைத்துறை, கட்டுமானம், பராமரிப்பு, கோட்டப்பொறியாளர் நாகராஜன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர்.


Next Story