நெடுஞ்சாலைத்துறைசாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


நெடுஞ்சாலைத்துறைசாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Feb 2023 12:15 AM IST (Updated: 27 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

இறந்த பணியாளர்களின் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி நேற்று தூத்துக்குடியில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செம்புலிங்கம் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் மா.சண்முகராஜா கலந்து கொண்டு பேசினார்.

கோரிக்கைகள்

ஆர்ப்பாட்டத்தில் சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், இறந்த சாலைப் பணியாளர்கள் 300-க்கும் மேற்பட்டோரின் குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும், 2003-க்கு பின்னர் பணியில் சேர்ந்த அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் வேலுச்சாமி, செ.அண்ணாத்துரை, கருப்பையா, இணை செயலாளர்கள் ஜான்சன், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் அண்ணாத்துரை நன்றி கூறினார்.


Next Story