பயணியிடம் வழிப்பறி; 3 வாலிபர்கள் கைது
பயணியிடம் வழிப்பறி செய்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை
மதுரை ஆரப்பாளையம் மோதிலால் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 48). சம்பவத்தன்று இவர் மாட்டுத்தாவணி செல்வதற்காக ஆரப்பாளையம் பஸ் நிலையம் அருகே பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர்கள் 3 பேர் அவரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் கத்தியை காட்டி நாகராஜை மிரட்டி அவரிடமிருந்து 2 ஆயிரம் ரூபாயை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இதுகுறித்து அவர் கரிமேடு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்தாஸ்புரம் சரவணன் (22), கரிமேடு சல்மான் (19), தத்தனேரி களத்துப் பொட்டல் பிரவீன்குமார் (22) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story