ஹில்டன் பள்ளி மாணவர்கள் சாதனை


ஹில்டன் பள்ளி மாணவர்கள் சாதனை
x
தினத்தந்தி 15 Dec 2022 12:15 AM IST (Updated: 15 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குத்துச்சண்டை போட்டியில் ஹில்டன் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்

தென்காசி

தென்காசி மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி பாவூர்சத்திரம் டி.பி.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ஆசில்முகமது, முகமது இர்பான் பதான், ஜெபின், ராஜவேல், முருக அஸ்வந்த், அர்ஷத், மகிமா ஆகியோர் முதலிடம் பிடித்தனர். செல்டன் சார்லஸ், சுப்புலட்சுமி ஆகியோர் இரண்டாம் இடத்தை பிடித்தனர்.

17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தீனதயாளன், கவின் ராமலிங்கம், கார்த்திகா, இஸ்ரா, ஜெனிஸ்ஸா ஆகியோர் முதலிடமும், முகமது யூசுப் இரண்டாம் இடமும், குகேஷ் மூன்றாம் இடமும் பிடித்தனர். 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ஸ்ரீமோகனசுந்தர், மெல்வின் செல்வ ஆண்டோ, முகமது யாசிர், நவீன், பிரவீன் குமார் ஆகியோர் முதலிடமும், கவுதம் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.

இவர்களில் முதலிடம் பிடித்த 16 பேரும் மாநில அளவில் நடைபெறும் குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் ஆர்.ஜே.வி.பெல், செயலாளர் கஸ்தூரி பெல், பள்ளி முதல்வர் ராபர்ட் பென் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


Next Story