ஹிந்த் யுனைடெட் மோர்ச்சா கட்சி கூட்டம்
நெல்லையில் ஹிந்த் யுனைடெட் மோர்ச்சா கட்சி கூட்டம் நடந்தது.
ஹிந்த் யுனைடெட் மோர்ச்சா கட்சி நிர்வாகிகள் கூட்டம் நெல்லை புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடைபெற்றது. தேசிய தலைவர் ஹர்மீந்தர் சிங் பன்னு தலைமை தாங்கினார். துணைத்தலைர் பயாஸ் அகமது, நெல்லை மாவட்ட தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார், பொதுச் செயலாளர் ரபீக் ஹனிபா பீர்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் துணை பொதுச் செயலாளர் ஞானதாஸ், துணைத்தலைவர் விக்ரம் பிரபாகர், பொதுச்செயலாளர் ஆஷா லதா, மாநில தலைவர் பேட்ரிசியா, மாநில பொதுச்செயலாளர்கள் ஜீவா பிரபாகர், ஜெயபிரகாஷ், துணைத்தலைவர்கள் வெங்கிடசாமி, தாமோதரன், செயலாளர் விஜயராகவன், நெல்லை மாவட்ட பொதுச் செயலாளர் முத்துகுட்டி, ஒருங்கிணைப்பாளர், செய்தி தொடர்பாளர் தருவை காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தேசிய தலைவர் ஹர்மீந்தர்சிங் பன்னு நிருபர்களிடம் கூறிதாவது:-
தேர்தல் ஆணையத்தில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டு தேர்தலில் போட்டியிட்டு வருகின்றன. எங்கள் கட்சியும் புதிதாக வந்துள்ளது. எங்களது கட்சியில் உறுப்பினராக சேருவதற்கு குறைந்த பட்சம் பட்டதாரியாக இருக்க வேண்டும். தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம். தமிழகத்தில் 6.28 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் முதல் கட்டமாக 10 சதவீதம் ஓட்டுகளை பெறுவதே நோக்கம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.