எவரெஸ்ட் மாரியப்ப நாடார் பள்ளியில் இந்தி தேர்வு


எவரெஸ்ட் மாரியப்ப நாடார் பள்ளியில் இந்தி தேர்வு
x
தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் பள்ளியில் இந்தி தேர்வு நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

சென்னை தட்சிண பாரத் இந்தி பிரசார சபா சார்பில் கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 11, 12 மற்றும் 19-ந் தேதிகளில் இந்தி தேர்வு நடத்தப்பட்டது. கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதியில் இருந்து 1072 பேர் தேர்வு எழுதினார்கள்.

தேர்வுகளை பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமையில் ஆசிரியர் குழுவினர் மேற்பார்வையில் நடத்தினார்கள். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைவரும், செயலாளருமான ஆர். ஏ.அய்யனார் செய்திருந்தார்.


Next Story