இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர் மாவட்ட இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தனசேகர் தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். பொருளாளர் சம்பத் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்க மாநில பொதுச்செயலாளர் மகேஷ் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல், கியாஸ் வரியை மத்திய, மாநில அரசுகள் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு அரசு வீடு வழங்கும் திட்டத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். போக்குவரத்து விதிமீறினால் ஆட்டோவை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்து டிரைவர் கையெழுத்துடன் அபராதம் விதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.