ஆண்டிப்பட்டி, கூடலூரில் இந்து முன்னணி பிரசார கூட்டம்
ஆண்டிப்பட்டி, கூடலூரில் இந்து முன்னணி பிரசார கூட்டம் நடந்தது
தேனி
இந்து முன்னணி சார்பில், தெருமுனை பிரசார கூட்டம் ஆண்டிப்பட்டியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களில் இருந்து அறநிலைய துறையினரை வெளியேற்ற வேண்டும். கோவில்களில் வசூலிக்கப்படும் தரிசன கட்டணங்களை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரசாரம் செய்தனர். இந்த பிரசாரத்தில், இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், செல்வம், நகர பொறுப்பாளர்கள் பால்பாண்டி, மகாலிங்கம், ஜெயபால், நகரச் செயலாளர் பகவதி ராஜ்குமார், அன்னையர் முன்னணி மாவட்ட செயலாளர் இந்திரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், கூடலூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் இந்து முன்னணி கொள்கை விளக்க தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதற்கு இந்து முன்னணி நகர பொது செயலாளர் ஜெகன் தலைமை தாங்கினார்.
Related Tags :
Next Story