காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு இந்து முன்னணி கண்டனம்


காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு இந்து முன்னணி கண்டனம்
x
தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-14T00:15:26+05:30)

சேது சமுத்திர திட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சேது சமுத்திர திட்டத்தை இந்து முன்னணி ஆதரித்ததாக, தமிழக சட்டசபையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை பேசியிருப்பது, கண்டனத்திற்குரியது. இந்து முன்னணி எந்த நிலையிலும் ராமர் பாலத்திற்கு எதிராக, சேது சமுத்திர திட்டத்தை ஆதரித்தது கிடையாது. ராமர் பாலத்தை பாதுகாக்க முதன் முதலாக தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி, ஜனாதிபதியிடம் மனு அளித்தவர் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன்.

எனவே செல்வபெருந்தகை இந்து முன்னணி பற்றிய தனது கருத்தை திரும்ப பெற வேண்டும். மேலும் இந்து முன்னணி பற்றிய அவரது பேச்சை சட்டசபை குறிப்பிலிருந்து நீக்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ராமர் குறித்து அ.தி.மு.க எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதை போன்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனும் ஆணித்தரமாக பேசியிருக்க வேண்டும். இனிமேல் எந்தவொரு அரசியல் கட்சியும் ராமர் பாலத்திற்கு எதிராக பேசினால் இந்து முன்னணி தமிழகம் முழுவதும் பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story