இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி
தக்கலை:
விலவூர் பேரூராட்சிக்குட்பட்ட அழகியமண்டபத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கான அனுமதிபெற்று விட்டு அதில் கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதை தடைசெய்ய வலியுறுத்தி தக்கலை ஒன்றிய இந்து முன்னணி சார்பில் தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் சுஜின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில பொதுச்செயலாளர் அரசுராஜா, மாவட்ட ஆலோசகர் மிசா சோமன், மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் உள்பட பலர் பேசினர். இதில் மாவட்ட செயலாளர் ராஜேஷ்வரன், துணைத்தலைவர் கங்காதரன், பா.ஜனதா மாவட்ட துணைத்தலைவர் குமரி ப.ரமேஷ் மற்றும் பெண்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story