இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடியில் இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் கே. கே.பொன்னையன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அதிக இடங்களில் இந்து சாம்ராஜ்ய தின விழா கொண்டாடுவது, வருகிற 17, 18-ந் தேதிகளில் நெல்லையில் நடைபெறும் இந்து முன்னணி மாநில செயற் குழுவில் தூத்துக்குடியில் இருந்து அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் கலந்து கொள்வது, விநாயகர் சதுர்த்திக்கு தூத்துக்குடியில் பல்வேறு பகுதியில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தில் இந்து முன்னணி மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார், இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் நாராயணராஜ், வடக்குமண்டல செயற்குழு உறுப்பினர் பலவேசம், மேற்கு மண்டல தலைவர் ஆறுமுகம், தூத்துக்குடி ஒன்றிய தலைவர் முத்துகிருஷ்ணன், இந்து இளைஞர் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவின் சண்முகம், இணை ஒருங்கிணைப்பாளர் சரண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.