போலீஸ் கமிஷனரிடம் இந்து முன்னணியினர் மனு
திராவிடர் கழக பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிக்க எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் கமிஷனரிடம் இந்து முன்னணியினர் மனு கொடுத்தனர்.
திருநெல்வேலி
நெல்லை தச்சநல்லூர் இந்து முன்னணி மண்டல தலைவர் ஓம்சக்தி மாரியப்பன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், "தச்சநல்லூர் சந்தி மறித்தம்மன் கோவில் அருகில் திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மீது, பகவான் கிருஷ்ணரை இழிவாக பேசியதாக முன்பு வழக்கு உள்ளது. எனவே இந்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளித்தால் இந்து தெய்வங்களை மீண்டும் இழிவாக பேசக்கூடும். அதனால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே திராவிடர் கழக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது" என்று கூறப்பட்டுள்ளது. அப்போது மாவட்ட அன்னையர் முன்னணி பொறுப்பாளர் முருகன், தச்சநல்லூர் மண்டல செயலாளர் சுந்தர், மண்டல செயற்குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story